முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா உள்துறை அமைச்சருக்கு கொரோனா : தனியார் மருத்துவமனையில் அனுமதி

திங்கட்கிழமை, 29 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானா உள்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தெலுங்கானாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானாவின் உள்துறை அமைச்சர் முகமது அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனோ வைரஸ் தொற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

முன்னதாக ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த முகமது அலி கடந்த ஞாயிறன்று இரவு ஜூப்பிலி ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தசூழலில் அவருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அமைச்சருக்கு  பாதுகாப்புக்காகச் சென்ற போலீசார், உதவியாளர்கள் ஆகியோரைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து