முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம்

புதன்கிழமை, 1 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரையில் கொரோனா நோய் தொற்று குறித்து வெங்கடேசன் எம்.பி. தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். 

இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது, சனிக்கிழமை அன்று மதுரையில் நான் அளித்த பேட்டியில்,  மதுரையில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் கூறியுள்ளதை அரசு கவனத்தில் கொள்ளும் என்று மட்டுமே கூறினேன். 

கொரோனா நோய்த் தொற்று குறித்து இறப்பு அதிகமாகவும், அதே போல் இறந்தவர்களை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லவில்லை என்று சமூக ஊடகங்களில் மக்களை அச்சுறுத்தும் வண்ணம் சிலர் வதந்திகளை பரப்பி தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.  அவர்கள் மீதுதான் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் கூறினேன். இதில்  எம்.பி. குறித்தோ, அவர் தெரிவித்த கருத்து குறித்தோ நான் தவறாக எதுவும் கூறவில்லை.  

இன்றைக்கு மதுரை மாவட்டத்தில் இந்த கொரோனா தொற்றுநோய்க்காக சிறப்பான முறையில் முதலமைச்சர் வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

மாவட்ட நிர்வாகம் செய்துள்ள அனைத்து நடவடிக்கைகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டுக் கொள்ளலாம் அப்படி அவர் பார்வையிட்டால்  இந்த அரசை நிச்சயம் அவர் பாராட்டுவார். இவ்வாறு அவர் கூறினார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து