முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபரானால் எச்1 பி விசாவுக்கான தடையை ரத்து செய்வேன்: ஜோபிடன் திட்டவட்டம்

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

நான் அதிபரானால் எச்.1 பி விசாவுக்கு தடை விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில், அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்ற கோஷத்தை முன்வைத்து வரும் டிரம்ப்,  கடந்த ஜூன் 23-ம் தேதி  நடப்பு ஆண்டு இறுதி வரை எச்.1 பி உள்பட பணிகள் தொடர்பான அனைத்து விசாக்களையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் அங்கு பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், நான் அதிபராக தேர்வானால் எச் 1 பி விசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்வேன் என்று  ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். டிஜிட்டல் முறையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஜோ பிடன், எச்.1 பி விசாவை அவர் (டிரம்ப்) ரத்து செய்துள்ளார். ஆனால், எனது நிர்வாகத்தில் அது இருக்காது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து