முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அரசிதழில் வெளியிட்டு எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்திற்கு சரியான பதிலடி : பிரதமர், முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி : அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம்

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசிதழில் வெளியிட்டு எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்திற்கு சரியான பதிலடி கொடுத்த பிரதமர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றினார். 

திருமங்கலத்தில் அம்மா சேரிடபில் டிரஸ்ட் சார்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றினார். 

மக்களால் நான். மக்களுக்காகவே நான் என்று மக்களுக்காக வாழ்ந்த அம்மா, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்று எண்ணமாக கொண்டார். அம்மாவின் எண்ணங்களை நிறைவேற்றும் வண்ணம் தென் மாவட்ட மக்களின் தலைநகரம், முத்தமிழ்ச்சங்கம் வளர்த்திட்ட மதுரைக்கு, வரப்பிரசாதமாய் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர பாரத பிரதமருக்கு தொடர் அழுத்தம் தந்து அதன் மூலம் கடந்த 2019 ஆண்டு ஜனவரி 27-ம் தேதி மதுரை தோப்பூரில் 1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பாரதப் பிரதமர் மூலம் அடிக்கல் நாட்ட வைத்து அம்மாவின் கனவை இதன் மூலம் முதல்வர் நனவாக்கியது மட்டுமல்லாது, இதற்காக முதல் கட்டமாக 224 ஏக்கர் நிலத்தை உடனடியாக ஒதுக்கித் தந்தார்.

தற்போது 5 கோடி அளவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இத்திட்டத்திற்கான கடன் தரும் ஜப்பான் ஜிக்கா கமிட்டி இந்த இடத்தை பார்வையிட்டு திருப்திகரமாக உள்ளது என்று தனது அறிக்கை சமர்ப்பித்தது. அதனையொட்டி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படுவதற்கானஅறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை வராது, வராது என்றும், இது மக்களை ஏமாற்றும் வேலை என்று எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியாக செய்த பொய் பிரச்சாரத்திற்கு சரியான பதிலடியை கொடுத்த பாரத பிரதமருக்கும், தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக பெற்றுத் தந்த இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் முதல்வர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் பாண்டியநாடு பண்பாளர் துணை முதல்வர் ஆகியோருக்கு அம்மா பேரவை சார்பில் கோடான கோடி நன்றி மலர்களை பாதம் பணிந்து வணங்கி சமர்ப்பிக்கப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, மாவட்ட வழக்கறிஞர்பிரிவு செயலாளர் தமிழ்செல்வன், அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி, இயக்குனர் தனலட்சுமி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் சேர்மன் தமிழழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

அதை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,

தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாய் எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது. தற்பொழுது மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அம்மா வழியில் இன்றைக்கு ஆட்சி செய்து வரும் நமது முதல்வர் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அதன் மூலம் மத்திய அரசு இதழில் வெளியிட செய்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இத்திட்டம் வராது என்று தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்தனர்.

தற்போது மத்திய அரசு இதழிலில் வந்தவுடன் எதிர்க்கட்சிகள் முந்திக்கொண்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். மக்களுக்கு நன்றாக தெரியும். எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்று கூறிய எதிர் கட்சியினர் பொய் பிரச்சாரத்தை முதல்வர் முறியடித்தாரோ அதேபோல் தமிழகத்தில் கொரோனா தொற்றுநோயை முற்றிலும் முறியடித்து கொரோனா இல்லாத தமிழகமாக உருவாக்குவார் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து