முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லடாக் விவகாரம்: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா - சீனா இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. 

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா சீனா ராணுவம் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் சுமார் 40 பேர் பலியாகினர். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. 

இதையடுத்து எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளிடையே ராணுவ ரீதியிலும், தூதரக ரீதியிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் கடந்த மாதம் 30-ம் தேதி ராணுவ கமாண்டர்கள் மடத்தில் நடந்த 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெற இரு நாடும் ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில் லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா - சீனா இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. கிழக்கு லடாக்கில் உள்ள சு‌ஷுல் பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் பிங்கர் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் படைகளை விலக்கி கொள்வது குறித்து இருதரப்பும் தீவிர ஆலோசனை நடத்தின. குறிப்பாக பிங்கர் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை குறைத்துக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து