முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் உத்தரவுக்கிணங்க பணியாற்றுகிற அலுவலர்களின் துரிதமான நடவடிக்கையால் கொரோனா தமிழகத்தில் இருந்து அகற்றப்படும் : அமைச்சர் காமராஜ் நம்பிக்கை

திங்கட்கிழமை, 20 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை தேனாம்பேட்டை மண்டலம், ஜெகதாம்பாள் காலனி மற்றும் முத்தையா தோட்ட பகுதியில் நடைபெற்று   வரும் மருத்துவ முகாம்களை அமைச்சர் காமராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்து,  பொதுமக்களுக்கு  முககசம், கபசுர குடிநீர் மற்றும் கையேடுகள் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அம்மாவின் வழிகாட்டுதலோடு தமிழகத்தின் முதல்வர் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் எல்லா வகையிலும் பொதுமக்களுக்கு சென்றடைய ஒரு உறுதியான நடவடிக்கை எடுப்பதினால் தற்போது சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று குறைந்து கொண்டு வருகிறது.  குறிப்பாக 15 மண்டலங்களிலும் சிகிச்சைகள் பெற்று வீடு திரும்புவோர் 81 சதவீதமாக இருக்கிறது அதில் குறிப்பாக 9-வது மண்டலம் தேனாம்பேட்டையில் 83 சதவீதமாக உள்ளது. 

இந்த மண்டலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். அதில் 83 சதவீதம் பேர் குணமடைந்து சென்று உள்ளனர்.  இதை போன்று மருத்துவ முகாம்கள் தொற்று கண்டறிய பயனுள்ளதாக இருக்கிறது.    இதுவரை இந்த மண்டலத்தில்  மட்டும் 1784 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன, அதில் 1.18 லட்சம் பேர் ஆய்விற்கு உட்படுத்திக் கொண்டனர். அதில் 5000 பேர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு, 4000 பேர் மட்டும் தான் தொற்று போன்ற நடவடிக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினந்தோறும் முதல்வர் கொடுக்கின்ற அறிவுரைகள், நடவடிக்கைகள், கண்காணிக்க ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி .எஸ் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் டி.ஆர்.ஓ அளவிளான 2 பேர்கள் போன்றவர்களை நியமித்தும், கீழ்மட்ட அளவில் மைக்கோர அளவில் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கின்ற அலுவலர்களை நியமித்தல் போன்ற உறுதியான நடவடிக்கை எடுத்ததினால் இந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாது, விழிப்புணர்வு நடவடிக்கையாக கிராமிய பாடல்கள், கிராமிய இசை நிகழ்ச்சி போன்றவையால் தொற்று குறைய வழி ஏற்பட்டுள்ளது. 

ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய காச நோய் தடுப்பு நிறுவனமும் இணைந்து சென்னை மாநகராட்சியில்  எலிசா (ELISA) பரிசோதனை 12000 நபர்களுக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இரத்தமாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதை போல் முதல்வர் உத்தரவுக்கு இனங்க பணியாற்றுகிற அலுவலர்களின் துரிதமான,  உறுதியான நடவடிக்கையால் கொரோனா தொற்று தமிழ்நாடிலிருந்து நாம் அகற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.  

நம் மாநிலத்தில் கூட்டுறவு வங்கிகள் ஏற்கனவே மூன்றடுக்கு முறையான மாநில கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராம கூட்டுறவு வங்கி என்ற அடிப்படையில் செயல்ப்பட்டு வருகிறது.  எனவே இது மக்கள் பிரதிநிதியால் செயல்பட்டு வருகிறது.  இதனை அப்படியே செயல்படுவதற்கு அனுமதிக்க முதல்வர் மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி விட்டார்.  ஏற்கனவே இருந்ததது போன்று கூட்டுறவு வங்கிகள் செயல்பட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைபாடு தமிழக மக்களின் நலனை எல்லா காலங்களிலும் எந்த நிலையிலும் முதல்வர் பாதுகாப்பார் என்று கூறினார்.

பின்னர் அமைச்சர் காமராஜ், முத்தையா தோட்ட பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை பார்வையிட்டு அங்கே அமைக்கபட்டுருந்த மருத்துவ முகாமை ஆய்வு செய்து  பொதுமக்களுக்கு  முககசம், கபசுர குடிநீர் மற்றும் கையேடுகள் வழங்கி பொதுமக்களிடம் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எப்படி பாதுகாப்புடன் இருப்பது குறித்து எடுத்துரைத்தார்.      

இந்த நிகழ்ச்சியின் போது  மண்டல கண்காணிப்பு அலுவலர் சுதன், துணை கண்காணிப்பாளர் தீபா சத்யன், சாந்தி, மண்டல அலுவலர்  ரவிக்குமார் மற்றும் தொடர்புடைய மண்டல அலுவலர்கள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து