முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைவிடாமல் உயரும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40,296-க்கு விற்பனை

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வரலாற்றில் முதல் முறையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40,296-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ஒன்று ரூ.24 உயர்ந்து ரூ.5037-க்கு விற்பனையானது. 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் நகைக்கடைகள் இந்தியா முழுவதும் மூடப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்றபடி மக்கள் வீட்டை விட்டே இன்னும் வெளியில் வரவில்லை.

சகஜநிலை திரும்பாத நேரத்திலும் தங்கத்தின் விலை மட்டும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. கொரோனாவின் தாக்கம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு போன்றவற்றால்  தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யூகத்தை பொய்யாக்கி, தங்கம் விலை மட்டும் கொரோனாவின் வேகத்தை விட அதிகமாக உயர்ந்து வந்தது. 

கடந்த 20-ம் தேதி முதல் தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் 6-வது நாளாக கடந்த சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்தது. அதாவது கிராமுக்கு 19 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,904-க்கும், சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 39,232-க்கும் விற்கப்பட்டது.

நேற்று முன்தினம் 7-வது நாளாக சவரன் ரூ. 40,104-க்கும் விற்பனையானது. இந்த வேகத்தில் தங்கம் விலை உயர்ந்தால் இன்னும் ஓரிரு தினங்களில் சவரன் 50 ஆயிரத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் நகை வியாபாரிகள் கூறி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று 8-வது நாளாக தங்கம் விலை உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ. 24 அதிகரித்து கிராம் ரூ.5,037-க்கும், சவரனுக்கு ரூ.192 உயர்ந்து சவரன் ரூ.40,296-க்கும் விற்பனையானது.

இது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக 7 நாட்களில் சவரன் ரூ.2488 அளவுக்கு உயர்ந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து