முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாஜ்வாடியின் மூத்த தலைவர் அமர்சிங் காலமானார்

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமர்சிங் காலமானார். 

நீண்ட காலமாக சிறுநீரக பாதிப்புக்காக அமர்சிங் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில மாதங்களாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அமர்சிங் நேற்று  காலமானார்.

இவர் சமாஜ் வாடி கட்சியில் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்தவர். இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

கடந்த 2013-ல் அமர் சிங்கிற்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து துபாயில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மீண்டும் 2016-ல் அரசியலுக்கு வந்தார்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்திடமிருந்து விலகிய பின்னர், 2008-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க கட்சி நகர்ந்த நேரத்தில் சமாஜ்வாடி கட்சியில் அமர் சிங் ஒரு முக்கிய தலைவராக இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து