வீரர்களுக்கு ஐந்து முறை கொரோனா பரிசோதனை: மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் திட்டம்

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      விளையாட்டு
Mumbai Indians team 2020 08 04

Source: provided

மும்பை : வீரர்களுக்கு ஐந்து முறை கொரோனா பரிசோதனை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் திட்டம் வீரர்களுக்கு ஐந்து முறை கொரோனா பரிசோதனை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் திட்டம் 

ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் முன், வீரர்களுக்கு ஐந்து முறை கொரோனா பரிசோதனை செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச்செல்ல அணி நிர்வாகங்கள் தயாராகி வருகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வீரர்களை அழைத்துச்செல்வதில் அணி நிர்வாகங்கள் உறுதியாக உள்ளன.

அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், தனது அணி வீரர்களை ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச் செல்லும் முன் 5 முறை கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கூறும் போது, “உள்ளூர் வீரர்கள் பலரும் மும்பைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மட்டும்தான் அவர்கள் அறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். 

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் விரைவில் மும்பைக்கு வரவுள்ளார்கள். வந்தவுடன் அவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பிறகு அவர்கள் பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள். 

மும்பைக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு வீரரும் அவர்களுடைய ஊரிலேயே இருமுறை கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மும்பையில் அனைத்து வீரர்களுக்கும் மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்வதற்கு முன்பு அனைத்து வீரர்களும் 5 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவார்கள்” என்று தெரிவித்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து