பொருளாதார முன்னணிக்கான போரும் முக்கியம்; மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      இந்தியா
Nitin-Gadkari 2020 07 13

Source: provided

புதுடெல்லி : கொரோனாவுக்கு எதிரான போரை போல் பொருளாதார முன்னணிக்கான போரும் முக்கியம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வர்த்தக பிரிவினருடன் காணொலி காட்சி மூலம் பேசும் போது, கொரோனா பாதிப்பு காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.10 லட்சம் கோடி பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.  அதனால் நாம் பொருளாதாரத்தில் பணம் புழங்க செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. 

கொரோனா வைரசுக்கு எதிராக நாம் மேற்கொண்டிருக்கும் போரை போன்று பொருளாதாரத்தில் முன்னணி பெறுவதற்கான போரும் முக்கியத்துவம் வாய்ந்தது.  5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரத்தினை இந்தியா அடைய வேண்டும். 

அதற்கான திறன் நம்மிடம் உள்ளது.  நம்மிடம் திறமை வாய்ந்த மற்றும் செயல்திறன் கொண்ட இளைய மனித சமூகம் உள்ளது என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து