முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்னிப்பு கேட்டால் எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட மாட்டார்: ஐகோர்ட்டில் காவல்துறை உத்தரவாதம்

வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு தொடர்பாக எஸ்.வி. சேகர் மன்னிப்பு கேட்டால் கைது செய்யப்படமாட்டார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மன்னிப்புக்கோரி அவர் மனுத்தாக்கல் செய்ய செப்டம்பர் 2 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. 

தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதனை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்திருந்த போது இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு தொடர்பாக எஸ்.வி. சேகர் மன்னிப்புக்கோரி மனுதாக்கல் செய்தால் அதனை பரிசீலித்து தாங்கள் அவரை கைது செய்ய மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 2-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளார். தொடர்ந்து, 2-ம் தேதி வரை எஸ்.வி.சேகரை கைது செய்ய மாட்டோம் என்று காவல்துறை சார்பில் வாய்மொழியாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து