முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்

திங்கட்கிழமை, 31 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 20 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.  இவற்றில் ஓமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி (சேலம்), புதூர் பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), சமயபுரம் (திருச்சி), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), விஜயமங்கலம் (குமாரபாளையம்), பாளையம் (தர்மபுரி), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மொராட்டாண்டி, திருமாந்துறை (விழுப்புரம்), வாழவந்தான் கோட்டை (தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்), விக்கிராவாண்டி (விழுப்புரம்), திருப்பராய்த்துறை (திருச்சி) உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் இன்று  செப்டம்பர் 1-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

வாகனங்களின் தரத்துக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு வழக்கமான நடை முறை தான் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து