முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9-ம் தேதி தி.மு.க. பொதுக்குழு : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9 - ந் தேதி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9 - ந் தேதி காலை 10 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாளை பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், பொருளாளராக டி.ஆர்.பாலு, எவ.வேலு, ஆ.ராசா ஆகியோரில் ஒருவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து