முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பு கடித்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்த 27 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

பல்வேறு சம்பவங்களில் பாம்பு கடித்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்த 27 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், விக்கிரபாண்டியம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மனைவி பானுமதி எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், வலங்கைமான் வட்டம், புலவர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மகன் பிரதீப் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், ஜம்புகுட்டப்பட்டி தரப்பு பழனி ஆண்டவர் நகரைச் சேர்ந்த சத்தியராஜ் மகன் சிறுவன் அஜய் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டம், நரசிங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பர்வீன்பீவி கணவர் அகமது இப்ராஹிம் ஷா பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  மானூர் வட்டம், தேவர்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் மஞ்சுநாதன் எதிர்பாராத விதமாக மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  திசையன்விளை வட்டம், கரைசுத்துபுதூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் முத்துகண்ணன் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

திசையன்விளை வட்டம், முதுமொத்தான்மொழி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திசையன்விளை வட்டம், திசையன்விளை கிராமத்தைச் சேர்ந்த கந்தராஜ் மகன் ராகுல் பிரசாத் கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம், குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொப்புலான் மகன் சிலம்பன் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், அகணி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கண்ணு மகன் கலியபெருமாள் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வரகூர் கிராமத்தைச் சேர்ந்த  மொட்டையம்மாள் மகன் ராமர் எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், சுரண்டை கிராமத்தைச் சேர்ந்த பிச்சம்மாள் கணவர்  வேலையா  எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவேங்கடம் வட்டம்,  குலசேகரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சமுத்திரவேல் மகன் மாரிச்சாமி எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி வட்டம், கோட்டலாம்பாக்கம் கிராமத்தில் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உடையானந்தல் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் மணிகண்டன் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

ஸ்ரீமுஷ்ணம் வட்டம், ஏ.வல்லியம் கிராமத்தைச் சேர்ந்த  நாராயணசாமி மகன் வீராச்சாமி விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், ஆமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எம். பழனிக்குமார் மின்கம்பத்தில் பணி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், தொட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த அபிராமியின் கணவர் விவீதன் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் மூர்த்தி மின்தடையை சரிசெய்யும் பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாடு கிராமத்தைச் சேர்ந்த சேட்டு மனைவி  அஞ்சாமணி எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி  உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் மற்றும் நகர் மின்பகிர்மான கழகத்தில் கம்பியாளராக பணியாற்றிய பொன்ராஜ் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், லிங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த  பஞ்சுவின் கணவர் பூசாரி எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  நிலக்கோட்டை வட்டம், பிள்ளையார்நத்தம் உள்வட்டம், கூவனூத்து கிராமத்தைச் சேர்ந்த மகாலெட்சுமியின் கணவர் ஜெயராஜ்  எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  சென்னை மாவட்டம், எழும்பூர் வட்டம், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி  மகன் சிறுவன் தருணேஷ்வரன் மின் விசிறி இயக்க முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், தளிகைவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் ஆறுமுகம் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  திருவள்ளூர் மாவட்டம், சிங்கிலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த  வீரப்பன் மகன் அஜித் என்கிற அஜித்குமார் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், கல்புதூர் கிராமத்தைச் சேர்ந்த அமராவதியின் கணவர் சண்முகம் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி  உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் சேகர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.     பாம்பு கடித்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்த 27 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 27 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து