அமைச்சரின் சகோதரி மரணம்: முதல்வர் எடப்பாடி இரங்கல்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      தமிழகம்
Edappadi 2020 09 16

Source: provided

சென்னை : அமைச்சர் பாஸ்கரனின் சகோதரி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சரின் அன்பு சகோதரி வசந்தா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று  (16.9.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். 

வசந்தாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

வசந்தாவின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து