தி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சி பாதையில் செல்கிறது : வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      தமிழகம்
Rajan Sellappa 2020 09 19

Source: provided

மதுரை : தி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார். 

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் மதுரை மேற்கு ஒன்றியத்தில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் சிந்தாமணியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் எம்.ரமேஷ் தலைமை வகித்தார்.  திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துகுமார் திருப்பங்குன்றம் பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமசந்திரன், மற்றும் காசிராமன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர். செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி இணைச்செயலாளர் கே.சி.பொன் ராஜேந்திரன், வட்டக் கழக செயலாளர்கள் கருணா, முருகேசன், செல்வம், கருத்தமுத்து, செல்லப்பாண்டி, சரவணன், முத்துக்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். 

இந்த நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் மேலூர் பி.எஸ்.துரைப்பாண்டி, மாவட்ட அவைத் தலைவர் எஸ்.என். ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் எஸ்.அம்பலம், மாவட்ட துணைச் செயலாளர் சசிகலா , மாவட்டக்  இணைச் செயலாளர் சரோஜா,மேலூர் ஒன்றிய செயலாளர் கே.பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றி செழியன் , மேலும் நகர செயலாளர் எஸ்.ஏ.ஏ.பாஸ்கரன், மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.பி.முத்துகிருஷ்ணன், மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் கே.சி. பி. ஜெயக்குமார், மாவட்டவழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் சேதுராமன், மாவட்ட, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சண்முகப்பிரியா ஹோசிமின், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கருத்த கண்ணன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் பி.செல்வகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.கே. ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

உறுப்பினர் சேர்க்கை முகாமில் வி.வி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது; 

அம்மாவின் வழியில் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை தந்து ஒரு மகத்தான ஆட்சியை முதலமைச்சர் செய்து வருகிறார் அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.  இங்கு நடைபெறும் இளைஞர் அணி கூட்டம் என்பது வருகின்ற 2021 தேர்தலுக்கான வெற்றி விழாவின் அச்சாரமாக திகழ்கிறது. இன்றைக்கு இந்த இயக்கத்திற்கு அம்மா பேரவை, இளைஞர் அணி, இளைஞர் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியவை நான்கு படைகளாக இருந்து திகழ்ந்து வருகிறது. தற்போது உள்ள வைரஸ் நோய் காலகட்டத்தில் மாணவர்கள் நலன் கருதி அனைவரும் பாஸ் என்று அறிவித்துள்ளார் அதுமட்டுமல்லாது அரியர்ஸ் தேர்வில் மட்டும் ஏழரை லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். 

அண்ணா இருமொழிக் கொள்கையில் திடமாக இருந்தார் நாடாளுமன்றத்தில் அண்ணா பேசும் போது சிலர் குறுக்கிட்டு பெரும்பாலான மாநிலங்களில் இந்தி இருக்கும்போது ஏன் இந்தியை ஆட்சி மொழியாக இருக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணா நமது இந்தியாவில் காக்கை அதிகமாக உள்ளது அதற்காக தேசிய பறவையாக காக்கையை ஆக்க முடியுமா என்று பதிலளித்தார்.   அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் ,புரட்சி தலைவி அம்மா ஆகியோரை பின்பற்றி இருமொழிக் கொள்கையில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். 

சட்டசபையில் முதலமைச்சர் நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. செய்த துரோகத்தை தோலுரித்துக் காட்டியது மட்டுமல்லாது அரசு பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி வரலாற்றை உருவாக்கினார். 

இந்த ஆட்சியில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. எங்கேயும் மின்வெட்டு இல்லை, ஜாதி மத கலவரம் இல்லை, சாலை வசதி , குடிநீர் வசதி உள்ளிட்ட என் எல்லா அடிப்படைத் தேவைகளும் 100 சகவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகத்தின் உரிமைகளைக் காக்க பல்வேறு சட்டங்களை முதலமைச்சர் சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளார்.

தி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்ற தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது. ஆனால் அ.தி.மு.க.வில் அப்படி அல்ல. இந்த இயக்கத்தில் சோதனை வரும். ஆனால் இறுதியில் இந்த இயக்கம் வெற்றி பெறும். இந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்கள் தங்கள் ரத்தத்தை சிந்தி இந்த இயக்கத்தை வளர்த்தவர்கள்.

1981,1991,2001,2011, ஆகிய ஆண்டுகளில் எல்லாம் கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. அதே வரிசையில் வருகின்ற 2021 ஆண்டில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். இளைஞர்கள் நீங்கள் அ.தி.மு.க.வின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி இந்த வெற்றிக்கு உங்கள் பங்கு மகத்தானது இருக்கவேண்டும் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து