அமீரகத்தில் முதன் முதலாக சுகாதார அமைச்சரின் உடலில் கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      உலகம்
Abdul-Rahman 2020 09 20

Source: provided

அபுதாபி : கொரோனா தடுப்பூசியை முதன்முதலாக அமீரக சுகாதாரத்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைஸ் உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.

அமீரகத்தில் சுகாதாரப் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் கொரோனா பாதிப்பை தடுக்க உதவும் வகையில் தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை முதன்முதலாக அமீரக சுகாதாரத்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைஸ் உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.  

அமீரகத்தில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அமீரகம் மற்றும் சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து இந்த கொரோனா தடுப்பூசியை சோதனை செய்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கான ஊசியை அமீரகத்தில் முதன்முதலாக நேற்று முன்தினம் அமீரக சுகாதாரத்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைஸ் உடலில் செலுத்தி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

சுகாதார பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடுப்பூசி உடலில் செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி மருத்துவ பரிசோதனையின் போது நல்ல முடிவுகளை தெரிவித்திருப்பது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.  இந்த தடுப்பூசி பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் இருந்து வருகிறது. இந்த தடுப்பூசி சட்ட மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப செலுத்தப்படுகிறது. மேலும் இதற்கான உரிமம் உள்ளிட்ட அனுமதிகளை விரைவாக வழங்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து