Idhayam Matrimony

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 16 ஜனவரி 2026      தமிழகம்
Avaniyapuram--2026-01-16

அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.

மதுரை அவனியாபுரத்தில் நேற்று முன்தினம் (ஜன. 15) நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண அதிகாலை முதலே பெருந்திரளான மக்கள் திரண்டனர். 1,100 காளைகளுக்கும், 600 வீரர்களுக்கும் அனுமதியளிக்கப்பட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி, வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவருக்குப் பரிசாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கும் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட்டது.

அவரைத் தொடர்ந்து, 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம்பிடித்த அவனியாபுரம் கார்த்தி-க்கு பரிசாக இருசக்கர வாகனமும், 16 காளைகளை அடக்கி ரஞ்சித் என்பவர் மூன்றாவது இடமும் பிடித்தார். மேலும், சிறந்த காளையாக விருமாண்டி சகோதரர்களின் காளையான முத்து கருப்பன் தேர்வு செய்யப்பட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் டிராக்டரும் பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டுப் போட்டியும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இருப்பினும், மதுரையின் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான் உலகளவில் பிரசித்தி பெற்றவை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து