பேட்ட திரைப்பட வசனத்தை பதிவிட்டு வெற்றியை கொண்டாடிய இம்ரான் தாஹிர்

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      விளையாட்டு
Imran-Tahir 2020 09 20

Source: provided

அபுதாபி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ‘பேட்ட’ திரைப்பட வசனத்தை இம்ரான் தாஹிர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐ.பி.எல். 2020 தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதில் சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிராக தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு சென்னை அணி ருசித்த முதல் வெற்றி இதுவாகும்.

அதிலும் குறிப்பாக சென்னை அணியின் கேப்டன் டோனி கிட்டத்தட்ட 436-நாட்களுக்குப் பிறகு மீண்டும் விளையாடியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு அறிவித்த பின், முதன் முறையாக டோனி  ஐபிஎல் போட்டியில் களம் கண்டார். இந்நிலையில் ரசிகர்கள் சென்னை அணியின் வெற்றியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். 

இதற்கிடையில் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளரும், தென் ஆப்பிரிக்க வீரருமான இம்ரான் தாஹிர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் வசனத்தைப் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.அதில், “திரும்பவும் நீ எங்களை (சென்னை சூப்பர் கிங்ஸ்) தொட்டிருக்கக் கூடாது.

தொட்டுட்டா தொட்டவன நாங்க விட்டதே இல்லை. இப்ப தானே காளியோட ஆட்டமே ஆரம்பமாகி இருக்கு. இன்னும் நிறைய சிறப்பான தரமான சம்பவங்கள் காத்துகிட்டு இருக்கு #எடுடா வண்டிய போடுடா விசில் என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சென்னை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து