Idhayam Matrimony

சுஷாந்த்சிங் மரணம் தற்கொலைதான்: எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

சனிக்கிழமை, 3 அக்டோபர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம், தற்கொலையால் ஏற்பட்டது தான் என எய்ம்ஸ் மருத்துவமனையால் அமைக்கப்பட்ட தடயவியல் குழு தெரிவித்துள்ளது.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது,

பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.  மேலும் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்தது.

அமலாக்கத்துறையின் விசாரணையின் போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து என்.சி.பி. எனப்படும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை போதைப்பொருள் வழக்குடன் தொடர்புபடுத்தி விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம், தற்கொலையால் ஏற்பட்டது தான் என எய்ம்ஸ் மருத்துவமனையால் அமைக்கப்பட்ட தடயவியல் குழு தெரிவித்துள்ளது. 

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து விசாரணை நடத்த எய்ம்ஸ் மருத்துவமனையால் தடயவியல் மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டது.  எங்களது முடிவான அறிக்கையில், இது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், என அந்த குழுவின் தலைவர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார். 

தூக்கிடப்பட்டதால் ஏற்பட்ட காயத்தைத் தவிர உடம்பில் வேறெந்த காயங்களும் இல்லை என்றும், இறந்தவரின் உடலிலோ அல்லது ஆடையிலோ சண்டையிட்டது போன்ற எந்த தடயமும் இல்லை எனவும் எய்ம்ஸ் தடயவியல் குழுவின் தலைவர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.  இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்து வருகிறது. எனவே தனது இந்த அறிக்கையை சி.பி.ஐ.யிடம் அந்த குழு வழங்கியுள்ளது.

மும்பை தடயவியல் ஆய்வகத்திலும், எய்ம்ஸின் நச்சுயியல் ஆய்வகத்திலும் எந்த ஒரு போதைப்பொருளும் கண்டறியப்படவில்லை என்றும் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.  இருப்பினும் வழக்கு விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு எந்த தகவலையும் மருத்துவக் குழு பகிர்ந்து கொள்ள இயலாது எனத் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து