எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையோ வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது. தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.12,400-க்கும், சவரன் ரூ.99,200-க்கும், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.11 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.222-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காமல் ஏறத் தொடங்கியது. கடந்த 12-ம் தேதியில் இருந்து அதன் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டது. கடந்த 11-ம் தேதி ஒரு சவரன் ரூ.96,400 என்று இருந்த நிலையில், 12-ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கு விற்பனை ஆனது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களுக்கு முன் மட்டும் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்றது. இதன் மூலம் தங்கம் இமாலய உச்சத்தை தொட்டது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விலை உயர்ந்த போதே தங்க வியாபாரிகள் ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டிவிடும் என்று சொன்னார்கள். அது நேற்று முன்தினம் நிஜமாகிப் போனது.
அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவுதான் கடந்த ஒரு வாரமாக தங்கம் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், ஒரே நாளில் நேற்று முன்தினம் விலை குறைந்து காணப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு கிராம் ரூ.215-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் என இதுவரை இல்லாத உச்சத்தில் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.211-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து விற்பனையானது. அதன்படி கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,400-க்கும், சவரன் ரூ.99,200-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11-ம், கிலோவுக்கு ரூ.11 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.222-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


