நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு நாளை தேர்வு- சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020      இந்தியா
Supreme Court 2020 10 12

Source: provided

புதுடெல்லி : நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு நாளை தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதியளித்துள்ளது.

கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.

ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில், கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு நாளை 14-ம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி  உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து