முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் இந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் - டிஜிபி தகவல்

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டத்தில் இருந்தே யூனியன் பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக தங்கள் நாட்டில் பயிற்சிபெறும் பயங்கரவாதிகளை எல்லைவழியாக பாகிஸ்தான் காஷ்மீருக்கு அனுப்பி வருகிறது.

மேலும், காஷ்மீரில் உள்ள இளைஞர்களை தவறான வழியை தேர்ந்தெடுத்து பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் இறக்கியுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரில் இந்த ஆண்டு இதுவரை 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. தில்பக் சிங் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டி.ஜி.பி. தில்பக்சிங் கூறியதாவது:-

காஷ்மீரில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 75 ஆபரேஷன்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் என மொத்தம் 138 பேர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடந்த 5 நாட்களில் 4 ஆப்ரேஷன்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். டோஹா பகுதியை சேர்ந்த 1 பயங்கரவாதி சரணடைந்துள்ளான். 

இன்று (நேற்று) நடந்த என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியும், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியுமான ஷைபுல்லா கொல்லப்பட்டுள்ளான். கொல்லப்பட்ட பயங்காவாதி பாதுகாப்பு படையினர் 3 பேர் உயிரிழக்க காரணமானவன் இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து