முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் உடல்நலக்குறைவு: தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

விழுப்புரம் : தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு திடீர் மூச்சு திணறலால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமான செய்தியறிந்து, நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று காலை சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். 

திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்த போது நேற்று காலை 10 மணி அளவில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. 

உடனே அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

இதன் பின்னர், நெஞ்சு வலியில் இருந்து விடுபட்ட அமைச்சர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து