முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் தங்க தலைமகனை பெற்றுத் தந்த கருணை தாய்க்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கி வணங்குகிறோம் : முதல்வரின் தாயார் மறைவுக்கு அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரங்கல் தீர்மானம்

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தமிழக முதல்வர் எடப்பாடியாரின் தாயார் தவுசாயம்மாள் மறைவிற்கு மாநில அம்மா பேரவையின் சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இரங்கல் கூட்டம் சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கத்தில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன் பி.ஜே.பி. சேர்ந்த ஸ்ரீனிவாசன், சசி ராமன், தே.மு.தி.க.வை சேர்ந்த கணபதி, அழகர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை தலைவர் ரகுநாத ராஜா, மடீசியாவைச் சேர்ந்த முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ரவிச்சந்திரன், செல்லம்பட்டி ராஜா, பூமா ராஜா, கொரியர் கணேசன், லட்சுமி, வக்கீல் தமிழ்செல்வன், நெடுமாறன், பாலசுப்பிரமணியம், காசிமாயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

முதல்வரின் தாயார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து கீழ்க்கண்ட இரங்கல் தீர்மானத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிறைவேற்றினார். அதன் விவரம் வருமாறு:- 

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற அம்மாவின் தாரக மந்திரத்துடன் பாரதப் பிரதமரே பாராட்டும் வகையில் இந்திய திருநாட்டிற்கு முன் உதாரணமாக திகழ்ந்து கோவிட் 19 நோய் தடுப்பு பணியில் கண் இமை துஞ்சாமல் தனது அயராத உழைப்பால் விலை மதிக்க முடியாத மனித உயிரை காத்திட்டும்,  நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் ஏற்றமே நாட்டின் ஏற்றம் என்ற சான்றோர் வாக்கின்படி தானும் விவசாயி வீட்டில் உதித்தவன் என்று உலகிற்கு நிரூபிக்கும் வகையில் விவசாயத்தை தளைத்திட செய்து, அதன் மூலம் ஒட்டுமொத்த விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்து அதனை தொடர்ந்து, அம்மாவின் உன்னத திட்டமான மழை நீர் சேமிப்பு திட்டத்தினை போன்று தமிழகத்தில் நீர் மேலாண்மையில் புரட்சியை உருவாக்கிடும் வகையில் ஏரி, கண்மாய் ஆகியவற்றை தூர்வாரி தமிழகத்தின் நிலத்தடி நீரை உயரச் செய்தும்,  நாட்டின் வருங்கால தூண்களான இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் வகையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியும், அதனைத் தொடர்ந்து கடல் கடந்து தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து இதன்மூலம் தமிழகத்தில் பல்வேறு வல்லரசு நாடுகளின் உள்ள தொழில் நிறுவனங்களின் தொழில் முதலீட்டை ஈர்த்து இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தும்,  திட்டங்களுக்காக மக்கள் அல்ல மக்களுக்காகவே தான் திட்டங்கள் என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் மக்கள் போற்றும் புனித ஆட்சியை நடத்தி ஒட்டு மொத்த இந்திய திருநாடே வியக்கும் வண்ணம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதமாக உயர்த்தி, தனிநபர் வருமானத்தை இரு மடங்காக உயர்த்தி இதன் மூலம் எட்டரை கோடி மக்களின் உயர்வுக்காக இந்த தாய் தமிழ் நாட்டிற்காக தங்கத் தலைமகனை ஈன்று கொடுத்த கருணைத் தாயே, முறை செய்து காப்பாற்று மன்னவன் மக்கட்டு இறையென்று வைக்கப்படும் என்ற திருவள்ளுவர் பாடல் வரிக்கு ஏற்ப தாய் திருநாட்டிற்கு  இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடியாரை கொடை உள்ளத்துடன் வழங்கிய கருணை தாய் கே.தவுசாயம்மாளின் மறைவு பேரிழப்பாகும்.

அவரின் ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்தனை செய்து அம்மா பேரவை சார்பில் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கி வணங்குகிறோம். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து