முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவக்கம்

புதன்கிழமை, 14 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தேர்வர்களுக்கு நேற்று (அக்.14) முதல் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) நேற்று முதல் வழங்கப்படுகின்றன. 

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விலோ / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத மாணாக்கர்களுக்கு, அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களைப் பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக (Statement Of Mark) வழங்கப்படும். 

இம்மாணவர்கள் +1, +2 பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு மேற்காண் இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள பள்ளி / தேர்வு மையத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து