முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி தாயார் மறைவு: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி இரங்கல்

புதன்கிழமை, 14 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையம் கருப்பக் கவுண்டரின் மனைவியும், விஜயலட்சுமி, கோவிந்தராஜூ மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அன்பு தாயாருமான தவுசாயம்மாள் 12-ம் தேதி அன்று இறைவனடி சேர்ந்தார்.  இந்த செய்தியை கேட்டதும் சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரில் சேலம் சென்றார்.

தனது தாயாரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நேற்று முன்தினம் (13-ம் தேதி) காலை அவரது உடல் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அம்மையாரது காரியம் (சாங்கியம்) இன்று காலை 9 மணிக்கு சிலுவம் பாளையத்தில் நடைபெற்றது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு ஜனாதிபதி ராமநாத் கோவிந்த், துணை ஜனாதிபதி எம்.வெங்கைய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் செய்தி அனுப்பி உள்ளனர். 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவு மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும், தாயாரை இழந்து வாடும் முதல்வருக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் தொலைபேசி மூலமாக முதல்வரை தொடர்பு கொண்டு தங்களது இரங்கலை தெரிவித்து, ஆறுதல் கூறினார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து