பீகார் தேர்தலையொட்டி வரும் 23-ல் 2 பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பிரச்சாரம்

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      இந்தியா
Rahul 2020 10 17

Source: provided

பாட்னா : பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 23-ம் தேதி இரண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டமனறத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் களப்பணியாற்றி வருகின்றனர். முக்கிய தலைவர்கள் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்து வருகின்றனர். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி வரும் 23-ம் தேதி இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். ஹிசுவா மற்றும் காகல்கானில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மாநில காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3-ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் 7-ம் தேதியும் நடைபெறும். 3 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து