சென்னை - பெங்களூர் இடையே இன்று முதல் சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      தமிழகம்
Train 2020 10 20

Source: provided

சென்னை : சென்னை சென்ட்ரல்- பெங்களூரு இடையே இரண்டு அடுக்கு குளிரூட்டப்பட்ட அதிவேக சிறப்பு ரயில் (06075) இன்று முதல் தினமும் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில் நிலையத்தை பிற்பகல் 1.10 மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதே போல, கே.எஸ்.ஆர் பெங்களூரு - சென்னை சென்ட்ரல் இடையே அதிவேக சிறப்பு ரயில் (06076) இன்று முதல் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, பெரம்பூர், வழியாக அன்றிரவு 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும் எனவும் கூறியுள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து