காஷ்மீர் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      இந்தியா
Indian-Army 2020 10 24

Source: provided

ஸ்ரீநகர் : இந்திய எல்லையில் பறந்து கொண்டிருந்த பாகிஸ்தானின் ராணுவ ட்ரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியிருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலால், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இருந்தே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அவ்வப்போது சீன வீரர்கள் எல்லையில் அத்துமீறி வருகின்றனர். அதே போல் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், பாகிஸ்தானின் ட்ரோன் எல்லை தாண்டியிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், கெரானில் இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தானின் ராணுவ ட்ரோன், நேற்று காலை 8 மணி அளவில் பறந்து கொண்டு இருந்துள்ளது.

இதனைக் கண்ட இந்திய ராணுவ வீரர்கள், உடனே அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். சீன நிறுவனமான டி.ஜே.ஐ தயாரித்த அந்த ட்ரோன், மேவிக் 2 புரோ மாடலை சேர்ந்தது. இந்திய எல்லையை உளவு பார்க்கும் நோக்கோடு பாகிஸ்தான் அனுப்பி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து