முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க கோரி பெற்றோர்கள் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் நியூயார்க் நகரில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர்களும் மாணவ, மாணவியரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது. அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அத்துடன் உயிரிழப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் அமெரிக்காவில் 181,099 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அத்துடன் ஒரு நாளில் மட்டும் 1974 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்தநிலையில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அமெரிக்காவில் அவ்வப்போது கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அதன்படி நியூயார்க் நகரில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என மேயர் அறிவித்தார்.  மேயரின் இந்த அறிவிப்புக்குப் பெற்றோர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

மாணவ, மாணவிகளுடன் போராட்டங்களில் ஈடுபட்ட பெற்றோர், பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் பார்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். பள்ளிகள் இல்லாமல் குழந்தைகள் பாடம் கற்றுக் கொள்ளப் போவதில்லை என்று போராட்டத்தில் வலியுறுத்தினர். பள்ளிகள் பாதுகாப்பானவை, பள்ளிகளை மூடியே வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தினர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து