திருப்பரங்குன்றத்தி்ல் சூரபத்மனை சம்ஹாரம் செய்த சுப்பிரமணிய சுவாமி : இன்று தேரோட்டம் ரத்து

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      தமிழகம்
Thiruparankundram 2020 11 1

Source: provided

திருப்பரங்குன்றம் :  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டி சூரசம்ஹார லீலை நடந்தது. இன்று (நவ. 21) தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 7:15 மணிக்கு கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. 

 கோயிலில் நவ. 15முதல் நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு, தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் இருந்த புனித நீர், சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 

 உச்சிகாலை பூஜை முடிந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்திலும், வீரபாகுத் தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர்..

சூரசம்ஹாரம்: சூரபத்மன் முன்செல்ல, வீரபாகு தேவர் விரட்டி செல்ல, தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநிதியான 

சிவாச்சார்யார் வாள் கொண்டு செல்ல, அவர்களைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வேலுடன் சூரனை எட்டு திக்குகளிலும் விரட்டிச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.    யானைமுகம், சிங்கமுகம், ஆட்டுத்தலை உட்பட பல்வேறு உருவங்களில் சூரன் மாறி மாறி செல்ல இறுதியில் சுப்பிரமணிய சுவாமி, சூரனை விரட்டி சென்று சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. 

 பின்பு சூரசம்ஹார புராண கதையை, பக்தர்களுக்கு சிவாச்சார்யார் கூறினார். உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மாலை மாற்றி, தீபாராதனை நடந்தது. 

சூரசம்ஹாரம் வழக்கமாக சன்னதி தெருவிலுள்ள சொக்கநாதர் கோயில்முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடக்கும். இந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவால் பக்தர்கள் இன்றி கோயிலுக்குள் நடந்தது. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து