அனைத்து திட்டங்களிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2020      தமிழகம்
Amitsha 2020 09 13

Source: provided

சென்னை : அனைத்து திட்டங்களிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். 

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்,  அமைச்சர்கள், பா.ஜ.க. மூத்த, முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது, 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.   உலகின் தொன்மையான மொழியாம் தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். 

 தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மிகவும் தொன்மையானது; தமிழ் மொழிக்கு தலை வணங்குகிறேன். முதல்வர், துணை முதல்வர்  தலைமையிலான ஆட்சியில் தமிழகம் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது .   இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது; தலை வணங்குகிறேன்.   நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகம். 

 தமிழகத்தை போல் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்கப்படவில்லை.  அனைத்து திட்டங்களிலும் தமிழகம் முன்னணி வகிக்கிறது.   விவசாயிகளின்  வங்கிக்கணக்கில் ரூ.95,000 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.  நீல புரட்சியிலும் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து