முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவர் புயல் சூழல் குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்தார் பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

புயல் பாதிப்பை சமாளிக்க தமிழகம், புதுச்சேரி அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், புயல் பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உடன் பேசினேன்.  மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தேன். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று அதில் பதிவிட்டுள்ளார். 

மேலும் இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று (24.11.2020) காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு மாநிலத்தில் நிவர் புயல் சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை கேட்டறிந்ததோடு, தேவைப்படும் உதவியும், ஒத்துழைப்பும், மத்திய அரசால் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து