முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் அறிவுரை

புதன்கிழமை, 25 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறிவுரை கூறியுள்ளார்.

நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.குடியிருப்பில் இருந்த அனைவரையும் மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினர். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.94 அடியாக அதிகரித்து உள்ளது. 

தற்போது ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,400 கனஅடி வருவதால் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கத்தில் இருந்து 7 கண் மதகு வழியாக அடையாறு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக சென்னை மாநகரமே ஸ்தம்பித்திருக்கிறது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளது. தற்போது திருவல்லிக்கேணியில் பலத்த சூறைக்காற்று வீசியதில் மரம் முறிந்து விழுந்ததில் சாலையில் நடந்து சென்ற 50 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

தற்போது தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மரத்தின் அடியில் சிக்கிய முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

நிவர் புயல் , கனமழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்க உதவி எண் அறிவித்தது சென்னை காவல்துறை 94981 81239 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் 

புயல் கரையை கடந்த பின்னரும் 6 மணிநேரத்திற்கு அதன் தீவிரம் இருக்கும்  இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:- மக்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் புயல்காரணமாக மரம் முறிந்து விழுந்து ஒருவர் இறந்துள்ள செய்தி மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து