தைப்பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு முதல்வர் எடப்பாடி வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      தமிழகம்
Edappadi 2020 11 25

Source: provided

சென்னை : தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 2021 ஜனவரி, 14 மற்றும் 15  தேதிகளில் சுப்ரீம் கோர்ட்டிற்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு  எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்பினை மனதார வரவேற்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்று திருவள்ளுவரால் உயர்வாய் உரைக்கப் பெற்ற உழவர்களின் பெருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 2021 ஜனவரி, 14 மற்றும் 15  தேதிகளில் சுப்ரீம் கோர்ட்டிற்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு  எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்பினை மனதார வரவேற்கிறேன். 

அம்மா, நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அம்மாவின் வழியில் செயல்படும் எனது தலைமையிலான அரசும் தொடர்ந்து இக்கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றது. 

தமிழரின் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கல் நன்னாளின் சிறப்பினை அனைவரும் அறியும் வண்ணம்  சுப்ரீம் கோர்ட்டிற்கு விடுமுறை அறிவித்த சுப்ரீம் கோர்ட்டிற்கு இத்தருணத்தில் என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து