பெண்கள் பிக் பாஷ் லீக்: சிட்னி தண்டர் அணி சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      விளையாட்டு
Sydney-Thunder 2020 11 29

Source: provided

சிட்னி : ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் சிட்னி தண்டர் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, சிட்னி தண்டர் வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களே அடித்தது. கேதரின் அதிகபட்சமாக 22 ரன்கள் அடித்தார். சிட்னி தண்டர் அணி சார்பில் இஸ்மாய்ல், ஷமி ஜான்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

பின்னர் 87 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சிட்னி தண்டர் களம் இறங்கியது. 13.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து