முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை விஜயசாந்தி இன்று பா.ஜ.க.வில் இணைகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 6 டிசம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : பிரபல நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து  விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் விஜயசாந்தியும் ஒருவர். இவர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இவர் 1998-ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்தார். அப்போது அவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் பா.ஜனதாவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.   

அந்த கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை. எனவே, 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தார்.  அந்த கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். 

பின்னர் 2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். 2018-ம் ஆண்டு விஜயசாந்திக்கு காங்கிரசில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது.  அதன் பிறகு காங்கிரசுக்காக உழைக்கப் போவதாக கூறினார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அக்கட்சியில் இருந்து விஜயசாந்தி விலகி விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர் இன்று பா.ஜ.க.வில் மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதற்காக நடிகை விஜயசாந்தி இன்று டெல்லி செல்ல உள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அவர் இன்று பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து