முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி நிர்வாகிகள் தேர்வு: ரஜினிகாந்த் ஆலோசனை

புதன்கிழமை, 9 டிசம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : அரசியல் கட்சி தொடங்கும் பணிகள் மற்றும் நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், வரும் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்கும் பணிகள், கட்சியின் நிர்வாகிகள் தேர்வு மற்றும் கட்சியை பதிவு செய்வது குறித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனமூர்த்தி மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளையும் ரஜினி வழங்கியதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து