முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பிறந்த நாள் வாழ்த்து

சனிக்கிழமை, 12 டிசம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நேற்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடிய ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை நேற்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.  நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- ரஜினிகாந்த் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்து. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதே போல்  நடிகர் ரஜினிகாந்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து