சென்னை : பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு காலமானார்.
29 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்படும் பி.வாசுவின் இயக்கத்தில் பிரபுவின் சின்னத்தம்பி உள்பட 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளவர் கே.பி.பிலிம்ஸ் பாலு. சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலு மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.