முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி - இடஒதுக்கீடு விவகாரம்: டாக்டர் ராமதாசுடன் இன்று அமைச்சர்கள் குழு சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கூட்டணி மற்றும் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாசை இன்று அமைச்சர்கள் குழுவினர் சந்தித்து பேசுகிறார்கள்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது.  இட ஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்ட பிறகுதான் கூட்டணி தொகுதி பங்கீடுகள் பற்றி பேச முடியும் என்று டாக்டர் ராமதாஸ் கூறி விட்டார்.  ஏற்கனவே கடந்த மாதம் அமைச்சர்கள் குழுவினர் திண்டிவனம் சென்று ராமதாசை சந்திக்க முயன்றனர்.

ஆனால் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு தீர்வு சொல்லுங்கள். அதன்பிறகு மற்ற விசயங்கள் பேசிக்கொள்ளலாம் என்று ராமதாஸ் கூறி விட்டார். இதனால் அமைச்சர்கள் சந்திக்காமலேயே திரும்பினார்கள்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, தன்ராஜ் ஆகிய மூவர் குழு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்கள். அப்போது ராமதாஸ் கூறிய நிபந்தனைகளை முதல்வரிடம் எடுத்து கூறி இருக்கிறார்கள். சுமார் ஒரு மணி நேரம் விவாதித்து இருக்கிறார்கள். 

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பதிலை டாக்டர் ராமதாசிடம் அவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் இரு தரப்பிலும் பேசப்பட்ட விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. 

இந்த நிலையில் டாக்டர் ராமதாசை சந்திக்க அமைச்சர்கள் குழு இன்று  செல்கிறது. அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமையில் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்று தைலாபுரத்தில் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசுகிறார்கள்.

அப்போது இடஒதுக்கீடு வழங்குவதில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் கூட்டணியில் தொகுதிபங்கீடு தொடர்பாகவும் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து