3 மணி 17 நிமிடங்கள்: பட்ஜெட் அறிக்கை வாசித்த கேரள நிதியமைச்சர் தாமஸ்

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      இந்தியா
Thomas 2021 01 15

Source: provided

திருவனந்தபுரம் : கேரள சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அறிக்கையை நிதியமைச்சர் தாமஸ் ஐசக் 3 மணி நேரம் 16 நிமிடங்கள் வாசித்து தாக்கல் செய்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய பிறகு ஜனவரி 8-ம் தேதி கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கவர்னர் முகமது ஆரிப் கான் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடர் பின் மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று ஆளும் இடது முன்னணி அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள குஜல்மண்டம் பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவி சினேகா எழுதிய கவிதையை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையைத் தொடங்கிய தாமஸ் ஐசக் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் வாசித்து கேரளத்தில் அதிகநேரம் பட்ஜெட் உரை வாசித்த நிதியமைச்சர் எனும் பெருமையைப் பெற்றார். 

கேரள காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான கே.எம்.மணி முன்பு மணி நேரம் 54 நிமிடங்கள் வாசித்த பட்ஜெட் உரையே முந்தைய அதிக நேரம் வாசித்த பட்ஜெட் உரையாக இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து