வரும் 22, 23-ம் தேதிகளில் கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்: 25 இடங்களில் பேசுகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021      தமிழகம்
Edappadi 2020 11 06-1

Source: provided

சென்னை : வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் அவர் கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார். 

22-ம் தேதி காலை 8 மணிக்கு கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராஜ வீதியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்குகிறார்.  அதைத் தொடர்ந்து செல்வபுரம், குனியமுத்தூர், கரும்புக்கடை, சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட், கிணத்துக்கடவு, கோவில்பாளையம் ஆகிய இடங்களில் பேசுகிறார். 

மதிய உணவுக்கு பின்னர் பிற்பகல் 3 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், ஆனைமலை, மாசாணியம்மன் கோவில், சுல்தான்பேட்டை, சூலூர் வழியாக கொடிசியா வருகிறார். அங்கு இரவு 8 மணிக்கு தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார். அன்று இரவு அவர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். 

மறுநாள் (23-ம் தேதி) காலை 8 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புலியகுளத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து சிங்காநல்லூர், பீளமேடு புதூர், காளப்பட்டி, அன்னூர் மேட்டுப்பாளையம், ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மதிய உணவு சாப்பிடுகிறார். 

பின்னர் மாலை 3 மணிக்கு பெரியநாயக்கன் பாளையம், துடியலூர், சாய்பாபா கோவில், வடவள்ளி, தொண்டாமுத்தூர், கோனியம்மன் கோவில் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து