முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பா.ஜ.க.வில் இணைந்தார் : உ.பி. துணை முதல்வராக்க திட்டம்?

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.கே.சர்மா, சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வில் இணைந்தார். இவரை உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வராக அமர்த்த அக்கட்சியின் தலைமை திட்டமிடப்படுவதாகத் தெரிகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தின் மாவ் மாவட்டத்தின் கஜா குர்த் கிராமத்தை சேர்ந்தவர் அர்விந்த் குமார் சர்மா. 1988-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்றவர் குஜராத் மாநில அதிகாரியானார். இவர், குஜராத்தில் அக்டோபர் 2001-ல் மோடி முதல்வரானது முதல் அவரது செயலாளராக இருந்தார்.

இதில் மோடியின் நம்பிக்கையை பெற்றதால் அவர் 2014-ல் பிரதமரான பிறகு ஆர்.கே. சர்மா மத்திய பணிக்கு அழைத்து தனது அலுவலகத்தில் அமர்த்தினார். 2020 முதல் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் செயலாளாரனவர், தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.  இந்நிலையில், இருதினங்களுக்கு முன் பா.ஜ.க.வில் இணைந்தார் ஏ.கே.சர்மா. இவரை உ.பி. பா.ஜ.க. சார்பில் அம்மாநில மேலவை உறுப்பினர்(எம்.எல்.சி) பதவியில் அமர்த்த முடிவு செய்தது. 

வரும் 28-ம் தேதி உ.பி.யில் மேலவைக்கு 12 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க.விற்கு சுமார் 10 உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர். இதற்காக 4 உறுப்பினர்கள் பெயர்களை உ.பி. பாஜக அறிவித்துள்ளது. இதில் தற்போததைய எம்.எல்.சி.க்களான உ.பி.யின் துணை முதல்வர் தினேஷ் சர்மா, பா.ஜ.க. மாநில தலைவரான சுவந்திர தியோ சிங் மற்றும் லக்ஷமண் ஆச்சார்யா ஆகியோருக்கு மீண்டும் எம்.எல்.சி.யாகும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. 

நான்காவதாக ஏ.கே.சர்மாவும் பா.ஜ.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் சர்மாவை அம்மாநில ஆட்சி நிர்வாகத்தில் பயன்படுத்த பா.ஜ.க.வின் தேசிய தலைமை உத்தரவிட்டது காரணமாகக் கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து