முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-1 எனவும் கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணி வீரர்களும் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். 

இந்த நிலையில் இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை அதிகம் கொண்டாட வேண்டாம் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்து இந்தி மொழியில் டுவீட் செய்தார். 

கெவின் பீட்டர்சன் அந்த டுவீட்டில் பல தடைகளை கடந்து ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் பெற்ற வரலாற்று வெற்றியை இந்திய அணி அதிகமான அளவில் கொண்டாடி வருகிறது.

எனினும் உண்மையான அணி (இங்கிலாந்து) இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறது. அப்போது உங்கள் மன்ணிலேயே உங்களை வீழ்த்தும். பாருங்கள் இன்னும் இரண்டு வாரங்கள் அதிகமாக கொண்டாட வேண்டாம். தயாராகுங்கள் எனத் தெரிவித்துள்ளார். 

இலங்கை அணி தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஜோ ரூட் இரட்டை சதம் விளாச இங்கிலாந்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5-ந் தேதி சென்னையில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து