விருப்பமுள்ளவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சாகு தகவல்

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      தமிழகம்
Sahu 2020 12 31

Source: provided

சென்னை : விருப்பமுள்ளவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்ப்பது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று கூறினார். 

கடந்த தேர்தல் பணிக்கு 3.50 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இம்முறை 4.50 லட்சம் பேரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 93 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.  மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டுகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம் என்றும், மற்றவர்கள் வாக்குச் சாவடிக்கு வந்தே வாக்களிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து