எல்லையில் சீனா தனது படைகளை திரும்ப பெறாவிட்டால் இந்தியா திரும்பப்பெறாது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      இந்தியா
Rajnath-Singh 2021 01 23

Source: provided

புதுடெல்லி : எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்திற்கு பின்னர் இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன.பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் படைகள் வாபஸ் பெறப்படவில்லை.  இந்த நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்  சிங் கூறியதாவது:-

எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை  வேகமாக உருவாக்கி வருகிறோம்.  ஆனால் சில திட்டங்களுக்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.  இந்தியா பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறது. எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது.  பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை எட்டலாம என்று நாங்கள் நம்புகிறோம்.

இப்போதுஎங்கள் படைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தியா எல்லையில்  உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்கத் தொடங்கியுள்ளது என்று கூறினார். அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஒரு கிராமத்தை நிர்மானித்து வருவதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத்சிங், இதுபோன்ற உள்கட்டமைப்பு பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து