தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

Gold-price 2020-11-10

கடந்த சில நாட்களாக உயர்வுடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை நேற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,144க்கு விற்பனை செய்யப்பட்டது.  கிராம் தங்கம் ரூ.20 சரிந்து ரூ.4,393 க்கு விற்பனையானது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து