எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நீடிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக (பிங்க் பந்து டெஸ்ட்) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த டெஸ்டில், டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஆனால், இரவு உணவு இடைவேளைக்கு முன்பாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 112 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 57 ரன்களுடனும் (82 பந்து, 9 பவுண்டரி), ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து நேற்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. எனினும், ரோகித் 66 மற்றும் கில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலி 27 ரன்களுக்கு போல்டாகி வெளியேறினார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அஸ்வின் 17 ரன்களில் வெளியேறினார். இஷாந்த் சர்மா 10 ரன்களுடன் ஆட்டமிழக்கவில்லை. 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 53.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணி 33 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணியில் கேப்டன் ரூட் 19, ஸ்டோக்ஸ் 25, போப் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால், இங்கிலாந்து அணி 30.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இந்தியா 2வது இன்னிங்சை விளையாடியது. இரவு உணவு இடைவேளை வரை இந்தியாவின் ரோகித் 6, கில் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா வெற்றி பெற 38 ரன்களே தேவை. இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம் அடைந்தது.
இதன்பின்னர் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 25 (25 பந்துகள் 3 பவுண்டரி, 1 சிக்சர்), சுப்மன் கில் 15 (21 பந்துகள் 1 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்துள்ளனர். இந்தியா 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குறைந்த பந்துகளில் டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 968 பந்துகளில் பங்களாதேஷ் அணியை இந்தியா வென்றதே சாதனை இருந்தது.
இந்த போட்டியில் அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் எடுத்துள்ளார். இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –06-02-2026
06 Feb 2026


